சென்னை: சிறுநீரக நோயை ஆரம்ப நிலை​யிலேயே கண்​டறியும் அதிநவீன உபகரணங்​களு​டன் கூடிய நட​மாடும் மருத்​துவ வாகனத்​தைச் சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்.சமீரன் மக்​கள் பயன்​பாட்​டுக்​குத் தொடங்கி வைத்​தார்.

தமிழ்​நாடு கிட்னி ரிசர்ச் ஃபவுண்​டேஷன் சார்​பில் மொபிஸ் இந்தியா மற்​றும் டேங்​கர் அறக்​கட்​டளை​யின் பெருநிறு​வன சமூகப் பங்​களிப்பு (சிஎஸ்ஆர்) நிதி​யின் கீழ் சிறுநீரக நோயை ஆரம்ப நிலை​யிலேயே கண்​டறியும் அதிநவீன உபகரணங்களுடன் கூடிய நட​மாடும் மருத்​துவ வாக​னம் சென்னை வள்​ளுவர் கோட்​டத்​தில் செயல்​பட்டு வரும் மாநகராட்சி நோய் கண்​டறியும் மையத்​தில் இயங்​கும் ஆர்சிஎம்இ டேங்​கர் டயாலி​சிஸ் பிரிவுக்கு வழங்கப்பட்டது. அதை சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்.சமீரன் நேற்று மக்​கள் பயன்​பாட்​டுக்​குத் தொடங்கி வைத்தார்.

பொது​மக்​களுக்​குச் சிறந்த மருத்​து​வப் பரிசோதனைகளை வழங்கும் வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்ள இந்த வாக​னத்​தில், அமரும் பகுதி, மருத்​துவ பரிசோதனை மேற்​கொள்​வதற்​கான படுக்கை வசதி, ரத்த சர்க்​கரை மற்​றும் ரத்த அழுத்த பரிசோதனை கரு​வி​கள், உடல் நிறை குறியீட்​டெண் (பிஎம்ஐ) அளவிடும் வசதி​கள் இடம்​பெற்​றுள்​ளன. குறிப்​பாக, ரத்​தத்​தில் உள்ள கிரியாட்​டி​னின் அளவை ஒரே நிமிடத்​துக்​குள் துல்லியமாகக் கண்​டறியும் பிரத்​யேக பரிசோதனை பட்டை (ஸ்டிரிப்), சிறுநீரக புரதம் மற்​றும் ரத்த கசிவை அறியும் சிறுநீர் பரிசோதனை வசதி​களும் இதில் இணைக்​கப்​பட்​டுள்​ளன.

இதன்​மூலம் ஆரம்ப நிலை​யிலேயே சிறுநீரக பாதிப்​பு​களைக் கண்​டறிந்து, தேவைப்​படுவோருக்கு மேல் பரிசோதனையாக சிறுநீரக ஸ்​கேன் உள்​ளிட்ட உரிய சிகிச்​சைகளை மருத்​துவ நிபுணர்​களின் வழிகாட்​டுதலுடன் மேற்​கொள்ள முடியும். வாகனத்தை தொடங்கி வைத்த பின்​னர், மாநக​ராட்சி ஆணை​யர் அந்த மையத்​தில் நோயாளி​களுக்கு அளிக்​கப்​பட்டு வரும் டயாலிசிஸ் சிகிச்​சைகளை​யும் நேரில் பார்​வை​யிட்டு ஆய்வு செய்தார்.

இந்​நிகழ்​வில் சென்னை மாநக​ராட்சி துணை ஆணை​யர் தாக்கரே சுபம் ஞானதேவ்​ராவ், மாநகர நல அலு​வலர் எம்.ஜெகதீசன், மொபிஸ் இந்​தியா ஃபவுண்​டேஷன் தலை​வர் ஜி.நரசிம்​மன், டேங்​கர் ஃபவுண்​டேஷன் தலை​வர் ஜார்ஜ் ஆபிரகாம், நிர்​வாக அறங்​காவலர் லதா குமாரசுவாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒடிசா நிலச்சரிவில் 12 பேர் மாயம்: மீட்புப் பணியில் 170 வீரர்கள்