இலைக் கட்சியில் தொழிற்சங்கத்தின் தலைமைப் பதவியில் இருந்த ‘கமலமானவர்’ 2021 தேர்தலில் தனக்கும் ஒரு தொகுதியை எதிர்பார்த்தார். ஆனால், எடக்கானவர் அவரை அவ்வளவாய் கண்டுகொள்ளவில்லை. இதனால், பார்ட்டியில் பற்றுதல் இல்லாமல் இருந்த கமலமானவர், சில மாதங்களுக்கு முன்பு விசில் கட்சியில் தனது ஆதரவாளர்கள் சகிதம் ஐக்கியமானார். அப்போதைக்கு இவரை வாரி அணைத்துக் கொண்ட வாகைக் கட்சி, அதன் பிறகு இவருக்கான ‘இலாகா ஒதுக்கீடு’ குறித்து மூச்சே விடவில்லையாம்.
இந்த நிலையில், தற்போது விசில் பார்ட்டியில் தொழிற்சங்கத்தைக் கட்டமைக்கும் வேலைகள் தொடங்கி இருக்கிறதாம். ‘குறிச்சி’ வடக்கு மாவட்ட விசில் பார்ட்டி செயலாளரான ‘திருப்பதி’ கடவுளின் பெயர் கொண்டவரை தலைவராகவும் பொருளாளராக விசில் பார்ட்டியின் அமைப்புச் செயல் புள்ளியான ‘கிங்’ சேகரையும் போட்டு தொழிற்சங்கத்தைக் கட்டமைக்கத் திட்டமாம். செயலாளர் பதவிக்கும் சொந்தக் கட்சிக்குள்ளேயே போட்டி இருக்கிறதாம்.
இருந்தாலும் நம்பி வந்த புதிய வரவான கமலமானவரை பரிசீலனையில் வைத்திருக்கிறதாம் கட்சித் தலைமை. தனக்கு செயலாளர் பதவி கொடுத்தால், இலைக் கட்சி தொழிற்சங்கத்தில் மிச்சமிருக்கும் தனது விசுவாசிகள் அத்தனை பேரையும் பனையூருக்கு அள்ளிக்கொண்டு வந்துவிடுவதாக உத்தரவாதம் அளித்திருக்கும் கமலமானவர், அதற்கான வேலைகளைக் கவனிக்க டூர் அடிக்கவும் ஆரம்பித்துவிட்டாராம்.
ஐயாவின் புதல்வியுடன் ‘ஸ்டாரின்’ மருமகன் தரப்பு பேச்சு | உள்குத்து உளவாளி
