வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது SIR தொடர்பான தேர்தல் அதிகாரின் கூட்டத்தில் இருந்து த.வெ.க. வெளிநாடப்பு செய்தது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இது தொடர்பாக வானதி சீனிவாசன் கூறியதாவது:-

தயவு செய்து த.வெ.க.வினர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். SIR-க்கு பிறகு மக்கள் உங்களுக்கு வாக்களித்து இருக்கிறார்கள். தேர்தல் நேர்மையாக நடத்திருக்கு. நம் நாட்டில் நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தின் அடித்தளம். இதன் மேல் ஒரு தப்பான அர்த்தத்தை சொல்லிக் கொண்டே போனீர்கள் என்றால், நாளைக்கு ஜனநாயகமே இருக்காது.

ஆதாரத்தோடு வாங்க

SIR வெளிப்படையாக நடந்த பிறகு, அதை நீங்கள் அரசியல் பார்வையில் பார்்க்கிறீர்கள் என்றால், ஜனநாயக அமைப்புகள் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது மட்டுமல்ல, தப்பான அபிப்பிராயத்தை மக்களிடம் உருவாக்குகிறீர்கள். வாக்காளர் பட்டியலில் குறை இருக்கு, குளறுபடி இருக்கு, வாக்களார்கள் விடுபட்டு போய் இருக்கிறார்கள் என்றால், ஆதாரத்தோடு வாங்க.

அனைத்து பெண்களுக்கும் வெற்றி பயணம் கொடுக்க வேண்டுமா?

போக்குவரத்துத்துறை நஷ்டம் என்பது ரொம்ப வருடமாக நடந்து கொண்டு இருக்கு. இலவசம் என்பது தொலைநோக்கு பார்வையுடன் நிதி நெருக்கடியை சீர்திருத்தம் செய்யும் அளவுக்கு கொண்டு வந்தால் வரவேற்கிறோம். இல்லையென்றால் ரொம்ப நாட்களுக்கு எவ்வளவு தூரம் போகும் என்று தெரியல.

வெற்றி பயணம் ஒரு சில பெண்களுக்கு பலன் கொடுக்கக் கூடியது. அதேசமயம் எல்லோருக்கும் கொடுக்க வேண்டுமா? எதாவது ஒரு இடத்தில் வரைமுறை வகுக்க வேண்டும். அரசு புத்திசாலிதனத்தை பயன்படுத்தி செய்ய வேண்டிய வேலை.