வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் முன்னேறினார்.
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெறுகிறது.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் டேனில் மெத்வதேவ் உடன் மோதினார்.
இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-4, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 4-6, 6-1, 6-7 (4-7) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரிடம் தோல்வு அடைந்தார்.
இன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் ஆகியோர் மோதுகின்றனர்.

