ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் அபாரமாக ஆடி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், பிரான்சின் தோமா ஜுனியர் பபோவ் உடன் மோதினார்.
இதில் தொடக்க முதலே சிறப்பாக ஆடிய லக்சயா சென் 21-17, 21-13 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் லக்சயா சென், டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆண்டன்சன் உடன் மோதுகிறார்.
ஏற்கனவே, பெண்கள் பிரிவில் பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

