ஒன்னுமே தெரியாத இவரெல்லாம் அமைச்சராகி, மக்களுடைய பணம் ஊதாரித்தனமாக போய்க் கொண்டிருக்கிறது என்று ஆதவ் அர்ஜூனாவை கடுமையாக விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

பொதுப்பணித்துறை அமைச்சர் (ஆதவ் அர்ஜூனா) இருக்கிறார். அவர் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார். அவர் ஒரு ஹீரோ ஆகலாம் என பார்க்கிறார். அவர் என்னமோ த.வெ.க.-வில் நீண்ட நாட்களாக இருந்த மாதிரியும், அந்த கட்சிக்கு தியாகம் செய்த மாதிரியும் பேசிக்கிட்டு இருக்காரு.

எப்படி செய்யனுமோ, அப்படி செஞ்சாரு.

அவர் கட்சிக்கு வந்து இரண்டு வருசம்தான் ஆகுது. த.வெ.க.-வில் பல அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் 25 வருடமாக ரசிகர்கள் மன்றத்தில் இருந்து, மாவட்ட செயலாளராக இருந்து படங்கள் ஓட வேலை செய்திருக்கிறார்கள்.

அப்படி இவர் இருந்தாரா?. முதலில் திமுக-வில் இருந்தாரு. பின்னர் விசிக-வுக்கு போனாரு. நம்மையும் அணுகி பார்த்தாரு. பதவி கேட்டாரு. இங்கு பதவி எல்லாம் விக்கிறது இல்லை. உழைப்பவர்களுக்குதான் பதவி. அப்படிப்பட்ட கட்சிதான் அதிமுக.

உடனே தவெக-வுக்கு போனாரு. எப்படி செய்யனுமோ, அப்படி செஞ்சாரு. பதவி வாங்கிட்டாரு. இப்போ அமைச்சராகிட்டாரு.

சட்டசபையில் டெண்டரில் முறைகேடு என்று பேசினார். டெண்டரை ரத்து செய்தாங்க. ஆனால் மறு டெண்டர் விடப்படவில்லை. கட்டுமான வேலைகள் பாதியிலேயே அப்படி நிக்கிறது. ஒரு பாலத்துக்கு டெண்டர் விடல. சாலைகளுக்கும் டெண்டர் விடல.

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட வேலைகள் பாதியில் நிக்கிறது.

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட வேலைகள் பாதியில் நிக்கிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிச்சிருக்கு. டெண்டர் ரத்து செய்யும்போது ஒரு டன் தார் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

இப்போது ஒரு கிலோ மீட்டர் சாலைக்கு ஒரு கோடி ரூபாய் ஆகிறது என்றால் தாருக்கு மட்டும் 50 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டும். எல்லா விலைகளும் ஏறிப்போச்சு. இப்போ என்ன செய்ய போறிங்க. மின்சார துறையில் எப்படி குளறுபடி ஏற்பட்டதோ, அதேபோல் அந்த அமைச்சர் தடுமாறிட்டு இருக்காரு.

டெண்டரை ரத்து செய்யாமல் இருந்திருந்தால்.,

டெண்டரை ரத்து செய்யாமல் இருந்திருந்தால் அப்போது எல்லா சாலைகளும் போடப்பட்டிருக்கும். மக்கள் வரிப்பணம் மிச்சமாகியிருக்கும். ஒன்னுமே தெரியாத இவரெல்லாம் அமைச்சராகி, மக்களுடைய பணம் ஊதாரித்தனமாக போய்க் கொண்டிருக்கிறது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.