பிரபல பாலிவுட் நடிகையும், ஜெயிலர் 2 படத்தில் பாடலுக்கு நடனமாடியவருமான நோரா பதேஹிக்கு ரூ.200 கோடி மோசடி வழக்கில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ரூ.200 கோடி மோசடி வழக்கு
தொழிலதிபர் சுகேஷ் சந்திரசேகர், 2020-21 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் சிறையிலிருந்த Ranbaxy மருந்து நிறுவன முன்னாள் உரிமையாளர் சிவிந்தர் மோகன் சிங்கை விடுவிப்பதாக கூறி அவரது மனைவியிடமிருந்து ரூ.200 கோடியை பெற்று மோசடியில் ஈடுபட்டடதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் நோரா பதேஹியிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது.
நவ.2 இல் ஆஜராக உத்தரவு
விசாரணை அதிகாரிகளிடம், தனக்கு சுகேஷ் சந்திரசேகருடன் அவரது மனைவி லீனா மரியா பால் மூலமாகவே தொடர்பு ஏற்பட்டதாகவும், தொழில் ரீதியிலான சந்திப்பு மற்றும் உரையாடல்கள் மட்டுமே நடைபெற்றதாகவும்
நோரா பதேஹி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நோரா பதேஹியை சாட்சியாக பட்டியலிட்டுள்ள டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் வருகிற 2-ஆம் தேதியன்று அவர் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.

