ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 7 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது.

சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி, அவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்ததோடு அவர்களின் விசைப்படகையும் இலங்கைக் கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

இந்த நிலையில், விசைப்படகுடன் 7 பேரையும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்படும் மீனவர்கள் ஒரு சில வாரங்களில் விடுவிக்கப்பட்டாலும், அவர்களின் விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் திருப்பித் தரப்படாமல் இலங்கை அரசிடமே இருப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

அன்னூர் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

The Sri Lankan Navy has arrested seven fishermen who had set out for fishing from the Rameswaram harbor.