மணிப்பூர் மாநிலத்தின் நானி மாவட்டம் கிக்ரு நாகா  உள்ள மலைக்கிராமத்தில் கும்பல் ஒன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

மணிப்பூரில் மீண்டும் தலையெடுக்கும் கலவரம்?

கடந்த 2023-ஆம் ஆண்டு மணிப்பூர் மக்கள்தொகையில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகம், தங்களை 'பட்டியல் பழங்குடியினர்' பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையின் தொடர்பாக, மைதேயி - குக்கி சமூகத்தினரிடையே கலவரம் ஏற்பட்டு சுமார் 200 பேருக்கு மேல் உயிரிழந்தனர். நிலைமை கைமீறியதை அடுத்து மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு வன்முறை பெருமளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

முதல்வர் பதவி விலகக்கோரி நடைபெற்ற பேரணி  

இந்நிலையில்,கலவரம் அடக்கப்பட்டிருந்தாலும் அதன் வீரியம் இன்னும் குறையாத நிலையில் ஆங்காங்கே வன்முறைகள் அரங்கேறிவருவது வாடிக்கையாகி உள்ளது. இந்நிலையில் வன்முறையை கண்டித்தும், அமைதியை  ஏற்படுத்த தவறியதாக கூறி அம்மாநில முதல்வரை பதவிவிலக வலியுறுத்தியும் நேற்று மைதேயி இனமக்கள் இம்பாலில் பிரமாண்ட பேரணியில் ஈடுபட்டனர். 

துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி

நானி மாவட்டம் கிக்ரு நாகா  மலைக்கிராமத்தில் கும்பல் ஒன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குக்கி சமூகத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். இதனால் மீண்டும் பதற்றநிலை அதிகரித்துள்ள நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இதேபோன்று சில நாட்களுக்கு முன்பாக மைதேயி சமூகத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.