தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை இழந்தது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன.

இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடந்தது. இதில் தென் ஆப்பிரிக்க அணி 176 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து, டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என இழந்த ஆஸ்திரேலிய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் நம்பர் 1 இடத்தை இழந்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

நியூசிலாந்து அணி ஒரு இடம் முன்னேறி 72.22 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி 66.67 சதவீத புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியது.

டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி 69.23 சதவீத புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு சரிந்தது.

இந்திய அணி 11 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 51.52 சதவீத புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

வங்கதேச அணி 47.62 சதவீத புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.