கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பயணிகளின் வசதிக்காக நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வருகிற 15-ந்தேதி கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக மதுரை கோட்ட நிர்வாகம் சார்பில் பயணிகளின் வசதிக்காக நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

சிறப்பு ரெயில்கள்

அதன்படி, இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06001) நெல்லையில் இருந்து வருகிற 15-ந்தேதி மாலை 3.20 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு திருச்செந்தூர் ரெயில் நிலையம் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06002) திருச்செந்தூரில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு இரவு 8.50 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் வந்தடைகிறது. ரெயிலில் 8 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

அதேபோல, மற்றொரு சிறப்பு ரெயில் (வ.எண்.06004) திருச்செந்தூரில் இருந்து அன்றையதினம் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் வந்தடையும்.

மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து ஒரு சிறப்பு ரெயில் (வ.எண்.06003) நள்ளிரவு 11.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.45 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். இந்த ரெயிலில் 10 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் ஆழ்வார்திருநகரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.