சென்னை,
தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.760-ம், கிராமுக்கு ரூ.95-ம் அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 1,06,040-க்கும், ஒரு கிராம் ரூ.13,255-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,210-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் 4-வது நாளாக இன்றும் மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.205-க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

