மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,989 கன அடியாக குறைந்தது.
நேற்று (நவ. 9) மாலை மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 3,998 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த தண்ணீர், இன்று (நவ. 10) காலை விநாடிக்கு 3,989 கன அடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருக்கிறது.
இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60.23 அடியிலிருந்து 60.45 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 25.02 டிஎம்சியாக உள்ளது.

