சென்னை: டாஸ்​மாக் பணி​யாளர்​கள் கலந்​தாய்வு மூலம் பணி நிர​வல் செய்ய நட​வடிக்கை எடுக்​கப்பட்​டுள்​ளது. தின​மும் நடக்​கும் விற்​பனை அளவைக் கொண்டு 3 வகைகளாக பிரித்து அதற்​கேற்ப கடை பணி​யாளர்​களின் எண்​ணிக்கை நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

இதை அடிப்​படை​யாக கொண்டு மாவட்ட மேலா​ளர்​கள் தங்​கள் மாவட்​டங்​களில் தேவை குறைவாக உள்ள கடைகளில் அதி​கம் உள்ள பணி​யாளர்​கள், தேவை அதி​கம் உள்ள கடைகளில் குறைவான பணி​யாளர்​கள் உள்​ளனரா என்​பதை கண்டறிந்து, ஒரே கடை​யில் 3 ஆண்​டுகள் பணி​யாற்​றிய பணி​யாளர்​களை பணி​யிட மாற்​றம் செய்ய வேண்​டும் என டாஸ்​மாக் நிர்​வாகம் உத்​தர​விட்​டுள்​ளது.

பணி​யிட மாறுதலில் மாவட்ட மேலா​ளரின் முடிவே இறுதியானது. பணி​யாளர் மாற்​றுத்​திறனாளியாகவோ கடைக்கு வேறு பணி​யாளர்​களே இல்லை என்றாலோ 3 ஆண்​டுகளுக்கு மேல்பணி​யாற்ற அனுமதிக்​கலாம்.

சட்டம் - ஒழுங்கு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை: தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை