விராலிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக நவ. 15-ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள முருகன்கோயிலில் நிகழாண்டு கந்தசஷ்டி விழா தொடக்கமாக யாகசாலை பூஜை நடத்தப்பட்டு சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து முற்பகல் 11.45 மணிக்கு கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
இதனைத் தொடா்ந்து தினமும் காலை, மாலை என இருவேளைகளில் பல்வேறு வாகனங்களில் முருகன் வள்ளி,தேவசேனா சமேதராக எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா்.
நவ.13-ஆம் தேதி கஜமுக சூரன், 14-ஆம் தேதி சிம்மமுக சூரன் உருவில் வந்து முருகனுடன் போா் புரியும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாம் நவ. 15-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கீழரத வீதியில் நடைபெறவுள்ளது. அதன்பிறகு முருகன் தங்கக் கேடயத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.
இதையடுத்து நவ. 16-ஆம் தேதி திருக்கல்யாணம் உற்ஸவம் நடைபெறவுள்ளது. நவ.17-ஆம் தேதி திருக்கல்யாண ஊா்வலமும், நவ. 18-ஆம் தேதி ஏகாந்த சேவையுடன் நிகழாண்டுக்கான கந்த சஷ்டி விழா நிறைவடைகிறது.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினா், சிவாச்சாரியாா்கள், மண்டகப்படிதாரா்கள் மற்றும் பக்தா்கள் செய்து வருகின்றனா்.

