நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 14 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்திலிருந்து மீண்டு வரும் நட்சத்திர வீரர்களான ரச்சின் ரவீந்திரா, கான்வே மற்றும் விக்கெட் கீப்பர் டாம் பிளெண்டல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ரச்சின் ரவீந்திரா
ரச்சின் ரவீந்திராவுக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருந்தது. கான்வே பயிற்சியின்போது ஏற்பட்ட மோதலில் தலையில் காயமடைந்து மூளையதிர்ச்சிக்கு சிகிச்சை பெற்று வருகிறார். பிளெண்டல் தொடைப்பகுதி தசைக் காயத்திலிருந்து மீண்டு வருகிறார். மூவரும் முதல் டெஸ்ட் போட்டிக்குள் முழு உடற்தகுதி பெறும் வகையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ரச்சின் ரவீந்திரா இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவில்லை. அதேபோல் கான்வே ஒருநாள் போட்டிக்கு முன் பயிற்சியில் ஈடுபட்டபோது காயம் அடைந்தார்.
நியூசிலாந்து அணி விவரம்:
டாம் லாதம் (கேப்டன்), டாம் பிளெண்டல், கான்வே, ஜேக்கப் டஃபி, மாட் ஹென்ரி, கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், ஹென்ரி நிக்கோல்ஸ், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், நாதன் ஸ்மித், பிளேர் டிக்னர், வில் யங்.
காயம் காரணமாக பென் சியர்ஸ், பால்க்ஸ், வில் ஓ'ரூர்கே ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
போட்டி அட்டவணை:
முதல் டெஸ்ட் நவம்பர் 19-ந்தேதி வெலிங்டனில் தெடாங்குகிறது.
இரண்டாவது டெஸ்ட் நவம்பர் 27-ந்தேதி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளுக்கான இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

