தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத இயக்குனர் சேரன். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட சேரன் தற்போது தனியார் தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி ஒன்றை தாெகுத்து வழங்கி வருகிறார்.
திவாகர் புகார்:
இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இன்ஸ்டாகிராம் மூலம் நெகட்டிவ் கமென்ட்கள் மூலம் பிரபலமான திவாகர் பங்கேற்றார். அப்போது, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கும், திவாகருக்கும் இடையே கருத்து மோதல் உண்டானது. இதுதொடர்பாக, திவாகர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை சேரன் மீது அடுக்கினார்.
சேரன் மீது தினசரி மிக கடுமையாக விமர்சனங்களை திவாகர் முன்வைத்த நிலையில், சேரன் இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
கடவுளே காப்பாற்ற முடியாது:
இதுவே உண்மையில் நடந்தது... அந்த நபரின் வாழ்க்கை கருதி அதை டெலிகாஸ்ட் செய்யாமல் தவிர்த்தோம். ஆனால் அவரே அதை வெளியில் கொண்டுவர காரணமாகிவிட்டார்.. முடிந்தவரை அமைதியாக பொறுமையாகத்தான் இருந்தோம்.. ஆனால் அவரை எந்த கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது என தெரிந்தது... சிலர் நான் அவரை அனுமதித்திருக்கவே கூடாது எனவும், சிலர் சேரனுக்கு இது தேவையா எனவும் கேட்கிறார்கள், சொல்கிறார்கள்.. ஒரு மனநோயாளி ரோட்டில் கிடப்பதை பார்த்து கடந்து செல்பவன் அல்ல நான். அவனை சரிசெய்து விடமாட்டோமா... இப்படியே விட்டால் எங்காவது அடிபட்டு ரோட்டில் கிடந்தால் பாவம் ஒரு உயிர் என காப்பாற்றி புத்தி சொல்ல, சரிசெய்ய நினைப்பவன்.. ஒரு உயிர்போய்விட்டடால் அவனை நம்பி உயிர்கள இருக்குமே என கவலைப்படுபவன் நான்.. அவர் பேசுவதால என் படைப்புகள் தாழ்ந்துவிடப்போகிறதா என்ன? மரியாதை நான் காப்பாற்றும் கட்டிக்காக்கும் என் பெயரில் இல்லை.. என் நடத்தையில் இருக்கிறது என நன்றாக அறிவேன் .. இதேநேரம் நாங்கள் அவரை வெளியேற்றி இருந்தால் இந்த சமூகம் இப்படித்தான் பேசுமா?.. அப்போதும் அவரை எப்படி அனுமதிக்காமல் விடலாம் சேரன் இப்படி நடக்கலாமா என பேசித்தான் இருப்பார்கள்... ஆகையால் நான் அங்கு நடந்துகொண்டது மனிதாபிமானமே... கண்டிப்பே.. அது மற்றவர்கள் பார்வையில் புரியவில்லை என்பதற்காக நான் என்னை தொலைக்க தயாராக இல்லை... https://t.co/ZogNrs8P7j
— Cheran Pandiyan (@CheranDirector) November 23, 2026
இதுவே உண்மையில் நடந்தது... அந்த நபரின் வாழ்க்கை கருதி அதை டெலிகாஸ்ட் செய்யாமல் தவிர்த்தோம். ஆனால் அவரே அதை வெளியில் கொண்டுவர காரணமாகிவிட்டார்.. முடிந்தவரை அமைதியாக பொறுமையாகத்தான் இருந்தோம்.. ஆனால் அவரை எந்த கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது என தெரிந்தது...
மனநோயாளியைக் காப்பாற்ற நினைப்பவன் நான்:
சிலர் நான் அவரை அனுமதித்திருக்கவே கூடாது எனவும், சிலர் சேரனுக்கு இது தேவையா எனவும் கேட்கிறார்கள், சொல்கிறார்கள்.. ஒரு மனநோயாளி ரோட்டில் கிடப்பதை பார்த்து கடந்து செல்பவன் அல்ல நான். அவனை சரிசெய்து விடமாட்டோமா... இப்படியே விட்டால் எங்காவது அடிபட்டு ரோட்டில் கிடந்தால் பாவம் ஒரு உயிர் என காப்பாற்றி புத்தி சொல்ல, சரிசெய்ய நினைப்பவன்..
என் படைப்புகள் தாழ்ந்துவிடாது:
ஒரு உயிர்போய்விட்டடால் அவனை நம்பி உயிர்கள இருக்குமே என கவலைப்படுபவன் நான்.. அவர் பேசுவதால என் படைப்புகள் தாழ்ந்துவிடப்போகிறதா என்ன? மரியாதை நான் காப்பாற்றும் கட்டிக்காக்கும் என் பெயரில் இல்லை.. என் நடத்தையில் இருக்கிறது என நன்றாக அறிவேன் .. இதேநேரம் நாங்கள் அவரை வெளியேற்றி இருந்தால் இந்த சமூகம் இப்படித்தான் பேசுமா?..
அப்போதும் அவரை எப்படி அனுமதிக்காமல் விடலாம் சேரன் இப்படி நடக்கலாமா என பேசித்தான் இருப்பார்கள்... ஆகையால் நான் அங்கு நடந்துகொண்டது மனிதாபிமானமே... கண்டிப்பே.. அது மற்றவர்கள் பார்வையில் புரியவில்லை என்பதற்காக நான் என்னை தொலைக்க தயாராக இல்லை...
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

