முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், ஜெம் வீரமணி தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ. 24) விசாரணைக்கு வரவிருக்கிறது.
இன்று விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள்
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதாக மோசடி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பிணை கோரிய வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி அதிமுக வழக்குரைஞர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரிக்கப்படவிருக்கிறது.
தனக்கு நிகழ்ந்த மனித உரிமை மீறல் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஜெம் வீரமணி மகள் அர்ச்சனா தொடர்ந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
தன்னை அவதூறாகப் பேசிய வங்கி கிளை மேலாளர் மீது வழக்குப்பதியக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகள் கயல்விழி அழகிரி தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
அன்பில் மகேஸ், முத்துகுமார்,சரவணன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தாக்கல் செய்த மனுவும் விசாரணை நடைபெறுகிறது.
Cases involving former minister Anbil Mahesh and Gem Veeramani are set to come up for hearing at the Madras High Court today (Nov. 24).

