சென்னை: அமைச்சர் வன்னியரசு புலியை துரத்திய நிகழ்வு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் மசினகுடிக்குச் சென்ற அமைச்சர் வன்னியரசு கடந்த நவ.10 அன்று வாகனத்தில் புலியை துரத்திச்செல்வது போன்ற வீடியோக் கள் சமூக வலைதளத்தில் வைரலாகின.
இந்தச் சம்பவம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் கந்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: சரணாலயத்தில் புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் எந்த அலுவலும் இல்லாமல், புலிகள் காப்பகத்துக்குள் சென்று, புலியை விரட்டி வீடியோ எடுத்து அதை பகிரங்கமாக பகிர்ந்துள்ளார்.
இது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம். எனவே இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
இந்த சம்பவம் தொடர்பாக புலிகள் காப்பக கள இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். அமைச்சரின் இத்தகைய செயலை ஆய்வு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும். இவ்வாறு கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
காவிரி விவசாயிகள் கருத்துகளை கேட்க திமுக சார்பில் குழு அமைப்பு