சென்னை: தமிழகத்​தில் ஏற்​றுமதி​யாளர்​களுக்கு உதவி செய்​யும் வகை​யில் ஒவ்​வொரு மாவட்ட தொழில் மையத்​திலும் வழிகாட்டி உதவி மையம் அமைக்​கப்பட்​டுள்​ள​தாக தொழில்​துறை சிறப்பு செயலர் விவேகானந்​தன் கூறியுள்ளார்.

இந்​திய தொழில் வர்த்​தக சபை கூட்​டமைப்பு (ஃபிக்கி), இந்​திய ஏற்​றுமதி​யாளர் நிறு​வனங்​களின் கூட்​டமைப்பு மற்​றும் தமிழ்​நாடு தொழில்​வழிகாட்டி அமைப்பு சார்​பில் தடையற்ற வர்த்​தக ஒப்​பந்​தங்​களை (எஃப்டிஏ) பயன்​படுத்​திக்​கொள்​வது தொடர்​பான விழிப்​புணர்வு கருத்​தரங்​கம் சென்​னை​யில்

நேற்று நடந்தது.

இதில், தமிழக அரசின் தொழில்​கள், முதலீட்டு மேம்​பாடு மற்​றும் வணிக​வியல் துறை​ சிறப்​புச் செயலர் விவேகானந்​தன் பேசியது: இந்​தி​யாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழகத்​தின் பங்​களிப்பு 40 சதவீதம் ஆகும்.

தமிழக ஏற்​றுமதியில் காஞ்​சிபுரம் மாவட்​டத்​தின் பங்​களிப்பு மட்​டும் 45 சதவீதம். மேலும், சென்னை, திருப்​பூர், கோவை, கிருஷ்ணகிரி மாவட்​டங்​களுக்​கும் மாநிலத்​தின் ஏற்​றுமதி​யில் முக்​கிய பங்கு உண்டு. கடந்த நிதி​யாண்​டில் தமிழகத்​தின் ஏற்​றுமதி 59 பில்​லியன் டாலராக இருந்​தது.

நடப்பு நிதி​யாண்​டில் ஏற்​றுமதி இலக்கு 72 பில்​லியன் டாலராக உள்​ளது. எஃப்டிஏ எனப்​படும் தடையற்ற வர்த்​தக ஒப்​பந்​தங்​கள் குறித்து தமிழக ஏற்​றுமதி​யாளர்​களுக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் வகை​யில் கருத்​தரங்​கு​கள், பயிலரங்​கு​கள் தொடர்ந்து நடத்​தப்​பட்டு வரு​கின்​றன.

இதனை ஏற்​றுமதி​யாளர்​கள் நன்கு பயன்​படுத்​திக்​கொள்ள வேண்​டும். 2036-ம் ஆண்​டுக்​குள் தமிழகத்தை 1.5 டிரில்​லியன் டாலர் பொருளாதா​ர​மாக மாற்ற அரசு இலக்கு நிர்​ணயித்​துள்​ளது. அதில் ஏற்​றுமதி​யின் பங்​களிப்பு மட்​டும் ஒரு டிரில்​லியன் டாலராகும்.

ஏற்​றுமதி​யாளர்​களுக்கு உதவும் வகை​யில் ஒவ்​வொரு மாவட்ட தொழில் மையத்​திலும் ஏற்​றுமதி வழிகாட்டி உதவி மையம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம் வர்த்​தக சந்தை வாய்ப்பு, தரச்​சான்று, ஆய்​வக வசதி, பிராண்ட் உரு​வாக்​கம் போன்​றவை குறித்து வழிகாட்​டப்​படு​கிறது. இவ்​வாறு கூறினார்.

மத்​திய அரசின் வெளி​நாட்டு வர்த்​தக இயக்​குநரக கூடுதல் பொது இயக்​குநர் ராஜலட்​சுமி தேவ​ராஜ் பேசும்​போது, “கடந்த ஐந்​தாண்டு காலமாக வர்த்​தக துறை​யில் இந்​தியா மிக வேக​மாக வளர்ந்து வரு​கிறது. கடந்த நிதி​யாண்​டில் நமது ஏற்​றுமதி 863 பில்​லியன் டாலராக இருந்​தது.

தற்​போது இந்​திய ரூபாயின் மதிப்​பும் வலு​வடைந்து வரு​கிறது. இது​வரை இந்தியா மேற்​கொண்​டுள்ள 9 தடையற்ற வர்த்​தக ஒப்​பந்​தங்​கள் 38 நாடுகளில் செயல்​பாட்​டுக்கு வந்​துள்​ளன. இதன்​மூலம் ஏராளமான வர்த்​தக வாய்ப்​பு​கள் உரு​வாகி வரு​கின்​றன.

அதேநேரம், வேளாண் பொருட்​களை மதிப்​புக்​கூட்டு பொருட்​களாக மாற்​று​வதிலும் கவனம் செலுத்த வேண்​டு்ம்” என்றார். முன்​னதாக, தமிழ்​நாடு ஃபிக்கி தலை​வர் என்.பூபேஷ் நாக​ராஜன் வரவேற்று பேசினார்.

வர்த்​தகம் மற்​றும் முதலீட்டு சட்ட மையத்​தின் தலை​வர் ஜேம்ஸ் ஜெ.நெடும்​பாரா, எஃப்டிஏ-வால் உரு​வாகும் வர்த்த வாய்ப்​பு​களை எடுத்​துரைத்​தார். இந்​திய ஏற்​றுமதி​யாளர் நிறு​வனங்​கள் கூட்டமைப்​பின் தென்​மண்​டல தலை​வர் கோபால​கிருஷ்​ணன் அறி​முகவுரை ஆற்றினார். ட்ரி​விட்​ரான் ஹெல்த்​கேர் தலைவர் (பெருநிறு​வன விவகாரங்​கள்) ஸ்ரீதரன் நன்றி கூறினார். இதைத்​தொடர்ந்து, தொழில்​நுட்ப அமர்​வு​ நடந்தது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகத்தில் 1.18 லட்சம் பேர் விண்ணப்பம்