சென்னை: கூட்டுறவு வீட்​டுவசதி இணை​யத்​தில் வீட்​டுக்​கடன் பெற்றுகட்​டத் தவறிய​வர்​களுக்கு ஒரு​முறை கடன் தீர்வு திட்​டத்தை அறி​வித்​துள்ள தமிழக அரசு அதற்​கான வழிகாட்​டுதலை வெளி​யிட்​டது.

இது​குறித்து வீட்​டுவசதித்துறை செயலர், ஆர்கிர்​லோஷ்குமார் வெளியிட்ட அரசாணை​: வீட்​டுவசதித் துறை அமைச்​சர் சட்​டப்​பேரவை மானிய கோரிக்கை அறி​விப்​பில்,’கடன்தாரர்​கள் வட்​டிச்​சுமையை குறைக்​கவும், முதன்மை சங்க அளவில் நீண்ட கால நிலுவை​யில் உள்ள தவணை தவறிய கடன்​களை வசூலிக்​கவும், கடந்த மார்ச் 31-க்கு முன் தவணை தொகையை செலுத்த தவறிய உறுப்​பினர்​களின் நிலுவை​யில் உள்ள அட​மானக்​கடன், கட்​டு​மானக்​கடன் மற்​றும் இதர கடன்​களுக்​கான அபராத வட்டி, டிகிரி வட்டி, தவணை தவறிய கடனுக்​கான இஎம்ஐ வட்டி தள்​ளு​படி வழங்கி, குறைந்த வரு​வாய் பிரி​வினர், நடுத்​தர வரு​வாய் பிரி​வினருக்கு மேலும் ஒரு சதவீதம் வட்டி தள்​ளு​படி செய்​யப்​படும் என அறி​வித்​திருந்​தார்.

நிபந்தனைகள் விவரம்

இதன்படி, சில நிபந் தனைகளுக்கு உட்​பட்டு திட்​டத்தை செயல்​படுத்த அனுமதி​க்​கும்​படி அரசுக்கு சங்​கங்​களின் பதிவாளர் (வீட்டுவசதி) கடிதம் எழுதியுள்ளார்.

முதன்மை கூட்​டுறவு வீட்​டுவசதி சங்​கங்​கள் இணை​யத்​தில் கடன் பெற்று கூட்​டுறவு வீட்​டுவசதி சங்​கங்​கள் மூலம் உறுப்​பினர்​களுக்கு வழங்​கப்​பட்ட அட​மான, கட்​டு​மானக் கடன்​களுக்கு மட்​டுமே ஒரு​முறை தீர்வு திட்​டம் பொருந்​தும்.

கடந்த மார்ச் 31-ம் தேதி கடனை திருப்​பிச் செலுத்த வேண்​டிய காலக்​கெடு முழு​மையாக முடிந்து, தவணை தவறி ஒரு​முறை கடன் தீர்வு திட்​டத்​துக்​கான அரசாணை வெளி​யிடப்​படும் நாளில் நிலுவை​யில் உள்ள அட​மானக்​கடன்,கட்டு மானக்​கடன்​கள் மட்டுமே இதில் தகுதிபெறும்.

கடனை செலுத்தி தீர்வு செய்​யும் நாள் வரை நிலுவை​யில் உள்ள அசல் மற்​றும் வட்டி உறுப்​பினர்​களால் செலுத்​தப்​பட வேண்​டும். நிலு​வையை முழு​மையாக ஒரே தவணை​யில் செலுத்​தும் ​போது மட்​டுமே தள்​ளு​படி கிடைக்கும்.

இந்த அசாணை வெளி​யிடப்​பட்ட நாளில் இருந்து ஒரு ஆண்​டுக்கு மட்​டுமே இத்​திட்​டம் நடைமுறை​யில் இருக்​கும். ஓராண்டு முடிந்​ததும் அரசாணை செயலிழக்​கும்.

கூட்​டுறவு சங்​கங்​களின் பதிவாளரின் இந்த நிபந்​தனை பரிந்​துரைகளை ஏற்று ஒரு​முறை கடன் தீர்வை திட்​டத்​துக்கு அனுமதி​யளித்து அரசு உத்​தர​விட்​டுள்​ளது.இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

பட்டு உற்பத்தியில் சீனாவை இந்தியா விரைவில் முந்தும்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தகவல்