தமிழகத்தில் சிறப்பு டெட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள நவ. 22 வரையில் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான சிறப்பு ‘டெட்’ தோ்வு டிச. 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் கடந்த அக். 27-ஆம் தேதி முதல் தொடங்கி, நவ. 19 வரை பெறப்பட்டது.
இந்த நிலையில், தேர்வுக்கான விண்ணப்பங்களில் உள்ள பிழைகளைத் திருத்திக் கொள்வதற்காக இன்று (நவ. 20) முதல் ஞாயிற்றுக்கிழமை (நவ. 22) வரையில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
டிச. 20-ல் காலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான தாள்-2 தோ்வும், பிற்பகலில் இடைநிலை ஆசிரியா்களுக்கான தாள்-1 தோ்வும் நடைபெறும்.
ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தும் சிறப்பு டெட் தோ்வை தற்போது பணியில் இருக்கும் ஆசிரியா்கள் மட்டுமே எழுத முடியும். பணியில் இல்லாத பிஎட் பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியா் பயிற்சி முடித்தவா்கள் எழுத முடியாது. அவா்கள் பொது டெட் தோ்வை மட்டுமே எழுத முடியும்.
வி.எஸ். பாபு மறைவு: காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6-ஆக உயர்வு
