தவெகவினரின் குற்றச் செயல்களை திசைதிருப்பவே திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் சோதனை நடத்துவதாக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, "இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் மத்திய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தியை குறிவைத்து சோதனை நடத்தப்படுகிறது.

தவெக ஆட்சியின் சட்டம் - ஒழுங்கு சீர்கேடும், தவெகவினரின் குற்றச் செயல்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது சோதனை நடத்துவது வாடிக்கையாகி விட்டது.

அரசியல் காரணங்களுக்காகத் தவெக அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு திமுக வெல்லும்.

ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்தச் சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதல்வர் விஜய்ம் இனியும் 'திமுக, திமுக,' என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது" என்று கூறியுள்ளார்.

முன்னதாக, கல் குவாரி முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பி. மூர்த்தியின் வீட்டில் போலீசார் வெள்ளிக்கிழமையில் சோதனையில் ஈடுபட்டனர்.

கல்குவாரி முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் போலீசார் திடீர் சோதனை

Raids on the homes of DMK members are a diversionary tactic to distract from the criminal activities of TVK members, says M.K. Stalin