பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் வனத்துறை விதிமுறைகளை மீறியதாக தமிழக அமைச்சர் வன்னி அரசு மீது விசாரணை நடத்த கர்நாடக வனத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் நவம்பா் 10 ஆம் தேதியில் சமூக நீதித்துறை அமைச்சா் வன்னி அரசை முதுமலை புலிகள் காப்பகத்தில் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் வனத்துறையினா் அழைத்து சென்றனா்.
அங்கு விதவிதமாக போட்டோ மற்றும் விடியோ எடுத்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு முன் அடா்ந்த வனப்பகுதிக்குள் இருந்து புலி ஒன்று நடந்து சென்றது. இதனைப் பாா்த்ததும் விரட்டிச் செல்வது போல் அவா் ஓடும் விடியோ, மற்றொரு விடியோவில், கர்நாடகாவபந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் காட்டு யானை ஒன்றை அவர் நெருங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
வனத்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில், வனத்துறைக்குச் சொந்தமான வாகனங்களில் அமைச்சர் தனது குடும்பத்தினருடன் பயணம் செய்வது அந்த விடியோவில் பதிவாகியுள்ளது.
இதனிடையே, வனத்துறையினா் எவ்வாறு அமைச்சரை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சென்று ரீல்ஸ் எடுக்க அனுமதித்தனா் என்று வன ஆா்வலா்கள் கேள்வி எழுப்பினா்.
இருப்பினும், அமைச்சர் தங்கியிருந்த அச்சகரை பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதிக்குச் சொந்தமான நிலத்தில்தான் அந்தப் புலி காணப்பட்டதாகவும், அது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நடக்கவில்லை என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே வனத்துறை பணியாளர்கள் அவருடனும் அவரது குடும்பத்தினருடனும் சென்றிருந்ததாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், விடியோ பதிவு செய்யப்பட்டபோது அமைச்சர் எந்தவொரு வாகனத்திலிருந்தும் கீழே இறங்கவில்லை என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
இந்த நிலையில், பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் அமைச்சர் வன்னி அரசுவின் நடவடிக்கைகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், யார் எந்தப் பதவியில் இருந்தாலும் வனத்துறை விதிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்றும் கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வி.எஸ். பாபு மரணத்தில் சந்தேகம்? காவல்துறையில் புகார்
