ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் லைம்லைட் பிரிவில் திரையிட டோரதி திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்ற திரைப்படம் டோரதி. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
மதுரையைப் பின்னணியாகக் கொண்டு 1990-களில் நடக்கும் கதையாக எடுக்கப்பட்ட இந்தப் படம், டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது.
இப்படம் பாலின அடையாளங்களையும் அதனைச் சமூகம் எதிர்கொள்ளும் விதத்தையும் மையப்படுத்தி உருவாகியுள்ளது.
இந்த நிலையில், நெதர்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் லைம்லைட் பிரிவில் திரையிட டோரதி திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கீர்த்தி சுரேஷுக்கு வெற்றியைக் கொடுக்குமா சத்தியவான் சாவித்திரி? திரை விமர்சனம்
