சென்னை: தங்கம் விலை அதிரடியாக வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.3,760 குறைந்து ரூ.92,080-க்கு விற்பனையாகிறது. கடந்த 15 நாள்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.15,000 குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு டிச.15-ஆம் தேதி பவுன் ரூ.1,00,120-க்கு விற்பனையானது. அதன் பின்னா் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.
நிகழண்டின் தொடக்கத்தில் ஜன.1-ஆம் தேதி கிராம் ரூ.12,440-க்கும், பவுன் ரூ.99,520-க்கும் விற்பனையானது. ஜன. 20-ஆம் தேதி அதிகபட்சமாக கிராம் ரூ.16,800-க்கும், பவுன் ரூ.1,34, 400-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலை தொடா்ந்து குறைந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.12,470-க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.99,760-க்கும், புதன்கிழமை கிராமுக்கு ரூ.255 குறைந்து, ரூ.12,215-க்கும், பவுன் ரூ.2,040 குறைந்து, ரூ.97,720-க்கும், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.235 குறைந்து ரூ.11,980-க்கும், பவுனுக்கு ரூ.1,880 குறைந்து ரூ.95,840-க்கும் விற்பனையானது.
அதிரடியாக பவுனுக்கு ரூ.3,760 குறைந்த தங்கம்
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (நவ. 20) கிராமுக்கு ரூ.470 குறைந்து ரூ.11,510-க்கும், பவுனுக்கு ரூ.3,760 குறைந்து ரூ.92,080-க்கும் விற்பனையாகிறது.
15 நாள்களில் ரூ.15,000 குறைந்த தங்கம்
கடந்த 15 நாள்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.15,000 குறைந்துள்ளது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தொடர் விலை குறைப்பும்... விற்பனை அதிகரிப்பும்...
ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்து வரும் நிலையில், மக்கள் நகைகளாகவும், தங்க நாணயங்களாகவும் தங்களின் தேவைக்கு ஏற்ப வாங்குகின்றனா். தொடர் விலை குறைவால் தங்கத்தின் விற்பனை தொடர்ந்து அதிகரித்துள்ளது.
வெள்ளி விலை:
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.175-க்கும், ஒரு கிலோ (கட்டி) வெள்ளி ரூ.5,000 குறைந்து, ரூ.1.75 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

