சென்னை: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கொட்டிவாக்கத்தில் நெல்லை நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் 42-வது ஆண்டு விழா நாளை மதியம் 2.30 மணியளவில் நடைபெற உள்ளது.
இதில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். மேலும், நெல்லை நாடார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியையும் திறந்து வைக்கிறார். இதுதவிர, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க உள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவரின் வருகையை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் (21-ம் தேதி) ஆகிய 2 நாட்களுக்கு மீனம்பாக்கம், கொட்டிவாக்கம், கிண்டி, நீலாங்கரை, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளும், அவர் பயணிக்கும் வழித்தடங்களும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனால், மேற்கண்ட பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகளைப் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை இருப்பு வைக்கும் காலக்கெடு 30-ல் இருந்து 15 நாட்களாக குறைப்பு
