சென்னை: கோவை பெரியார் அறி​வுலக புத்​தக கொள்​முதல் முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்​புத் துறை விசா​ரணைக்கு உத்​தர​விடக் கோரி திமுக சட்​டப் பிரிவு இணைச் செய​லாளர் இ.பரந்​தாமன் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

நீதிபதி வி.லட்​சுமி நாராயணன் முன்பு இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அரசுத் தரப்​பில் ஆஜரான கூடு தல் குற்​றவியல் வழக்​கறிஞர் அருண் அன்​புமணி, “லஞ்ச ஒழிப்​புத்துறை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து அகல்விளக்கு பதிப்​பக உரிமையாளர் மோகனை கைது செய்​துள்​ளனர்.

பொது நூல​கத் துறை இயக்​குநரிடம் விவரங்​கள் சேகரிக்​கப்​பட்​டுள்​ளன. அவை உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் 20-ம் தேதி தாக்​கல் செய்​யப்​படும்” என்​றார்.

இது​தொடர்​பாக ஆதா​ரங்​களைத் திரட்​டிய பரந்​தாமனை முக்​கிய சாட்​சி​யாக விசா​ரிக்க லஞ்ச ஒழிப்​புத் துறைக்கு உத்​தர​விட அவரது தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர்கள் என்.ஆர்.இளங்கோ, ஆ.தாமோதரன் வலியுறுத்​தினர்.

இதையடுத்து நீதிபதி, “லஞ்ச ஒழிப்​புத் துறை விசா​ரணையை கண்​காணிப்​ப​தாக உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு தெரி​வித்​தால் இந்த வழக்​கையும் அங்கு மாற்ற தலைமை நீதிப​திக்கு பரிந்​துரை செய்​யப்​படும்.

மதுரை அமர்​வில் விசா​ரணை வரும் போது பரந்​தாமன் தொடர்ந்த வழக்கு விவரத்தை போலீ​ஸார் தெரி​விக்க வேண்​டும்” என உத்​தர​விட்டு, விசா​ரணையை நவ.23-ம் தேதிக்கு தள்​ளிவைத்​தார்.

கடன் மூலம் கறுப்பு பணம் வெள்ளையாகும் அபாயம்: வங்கிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வருமான வரி இயக்குநர் அறிவுறுத்தல்