சென்னை: மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் மனைவியும், கிரீன்கலாம் அமைப்பின் நிறுவனருமான அருட்செல்வி, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை ேநற்று சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இன்று (நேற்று) எனது கணவர் விவேக்கின் 66-வது பிறந்தநாள். முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு அவரை இந்த நல்ல நாளில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
இந்த சந்திப்பின்போது, 2010-ம் ஆண்டில் எனது கணவர் தொடங்கிய திட்டமான கிரீன் கலாம் என்ற ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் பற்றி பேசினேன். அந்த திட்டத்துக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டேன். அரசு ஆதரவு தரும் என்று முதல்வர் உறுதி அளித்தார். குடும்பத்தை பற்றியும் அவர் அன்புடன் விசாரித்தார்.
விவேக் 2021 வரை 11 ஆண்டுகளில் 37 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். அதன் பின்னர் 5 ஆண்டுகளில் 80 ஆயிரம் மரக்கன்றுகளை மட்டுமே நட்டுள்ளேன். தாமதமாகத்தான் செயல்படுகிறேன். தொடர்ந்து இதை செயல்படுத்துவோம்.
பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேடு: திமுக தொடர்ந்த வழக்கு விசாரணை நவ.23-க்கு தள்ளிவைப்பு
