ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் , மம்மூட்டி , சாய் பல்லவி , ஶ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ள படம் ஓம். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தனுஷின் 55ஆவது படமாக உருவாகியுள்ள ஆம் உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. ஓம் படத்தைப் பார்த்தவர்கள் படம் பற்றி என்ன விமர்சனம் சொல்லியிருக்கிறார்கள் என்று இந்த விமர்சன தொகுப்பில் பார்க்கலாம் 

ஓம் திரைப்பட விமர்சனம் 

ஓம் படம் பார்த்த ரசிகர் ஒருவர் இப்படி கூறியுள்ளார் "‘ஓம்’ திரைப்படத்தின் முதல் பாதி விறுவிறுப்பான ஸ்பை த்ரில்லராக அமைந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷின் எனர்ஜியான நடிப்பைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மம்மூட்டியின் ஸ்கிரீன் பிரசன்ஸ் கவனம் ஈர்க்கிறது. சாய் அபயங்கரின் பின்னணி இசை படத்திற்குப் பலம் சேர்க்கிறது. மெதுவாகவும் சீராகவும் கதைக்களத்தை நகர்த்தும் இயக்குநர், இடைவேளையை நெருங்கும்போது படத்தின் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார். ஆங்காங்கே படத்தின் நீளம் காரணமாகச் சில தொய்வுகள் இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் படம் சுவாரஸ்யமாகவே செல்கிறது. சிங்கிள் ஷாட் காட்சி, ‘அலகலோவா’ பாடல், ரெட்வுட் கடத்தல் தொடர்பான காட்சிகள் மற்றும் இடைவேளைக்கு முந்தைய காட்சிகள் படத்தின் முக்கியமான ஹைலைட்ஸ். குறிப்பாக, எதிர்பாராத வகையில் அமைந்துள்ள உணர்வுப்பூர்வமான இடைவேளைக் காட்சி கவனம் ஈர்க்கிறது. இதுவரை படம் சிறப்பாகவே அமைந்துள்ளது. இரண்டாம் பாதியில் கதை எந்த திசையில் பயணிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது."

#OM First Half Review 🍿 - An Engaging Spy Thriller so far From Rajkumar Periyasamy..🤝 - It's Good to see the Energetic #Dhanush after a while..🔥 #Mammootty's Screen Presence was..👌 - #SaiAbhyankkar's Score..👍💥 - Film slowly and steadily builds up the drama and goes gripping until the interval..👍 - Few lags here and there due to the length but Film was engaging in most part.. - The Single Shot sequence, Alakalova song, Redwood smuggling portions and Pre Interval to interval block stretch were the highlights so far.. - An Unexpected Emotional Interval block..✌️ - Good show So far.. Waiting to see how this drama is gonna turn out in the second half..🤝 - Onto the Second half now..✌️

— Laxmi Kanth (@iammoviebuff007) November 20, 2026

"‘ஓம்’ திரைப்படத்தின் இடைவேளைக் காட்சி வரை, ‘குருதிப்புனல்’, ‘இன்டர்னல் அஃபேர்ஸ்’ படங்களின் பாணியில் சிறப்பாக ஆய்வு செய்யப்பட்ட புலனாய்வு த்ரில்லராக படம் அமைந்துள்ளது. தனுஷ் ஏராளமான காவல்துறையினரைத் துரத்திச் செல்லும் அறிமுகக் காட்சி அவரது கதாபாத்திரத்திற்கு மாஸையும் வலுவான அறிமுகத்தையும் கொடுக்கிறது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி வழக்கமான கமர்ஷியல் அம்சங்களைவிட நுணுக்கமான விவரங்கள், கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் வலுவான திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது படத்தில் தெரிகிறது." என மற்றொரு ரசிகர் தெரிவித்துள்ளார். 

நடிப்பு

நடிப்பு குறித்து "சமீபகாலமாகத் தனுஷ் நடித்த தீவிரமான கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட புதுமையான தோற்றத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். நித்யா ரெட்டி கதாபாத்திரத்தில் சாய் பல்லவி மிகவும் பொருத்தமாக இருப்பதுடன், வலிமையான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். ஸ்ரீலீலா நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் என இரண்டிலும் கவனம் ஈர்க்கிறார். சாய் அபயங்கரின் இசை படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக, அவரது பின்னணி இசை படத்தின் அனுபவத்தை மேலும் உயர்த்துகிறது." என சிலர் கூறியுள்ளார்கள்.