சென்னை: அண்ணா பல்​கலைக்​கழக முன்​னாள் துணைவேந்​தரும், யுபிஎஸ்சி முன்​னாள் உறுப்​பினரு​மான பேராசி​ரியர் இ.பால​குருசாமி தமிழக முதல்​வருக்கு அனுப்​பியுள்ள மனுவில் கூறி​யிருப்​ப​தாவது: நீட் தேர்வை ரத்​துசெய்து பிளஸ் 2 மதிப்​பெண் அடிப்​படை​யில் மருத்​து​வப் படிப்​புக்​கான மாணவர் சேர்க்​கையை மேற்​கொள்ள அனுமதி வழங்க வலியுறுத்தி சட்​டப்​பேரவை​யில் கடந்த ஆக.11-ம் தேதி மீண்​டும் ஒரு தீர்​மானம் நிறைவேற்​றியது வருத்​தம் அளிக்​கிறது.

பொருளாதா​ரத்​தில் நலிவடைந்த பிரி​வினர், கிராமப்​புற மாணவர்​கள், தமிழ்​வழி​யில் கல்வி பயிலும் மாணவர்​கள் எதிர்​கொள்​ளும் சிரமங்​கள் குறித்து அடுத்​தடுத்து வந்த மாநில அரசுகள் வெளிப்​படுத்​திய கவலைகளை முழு​மையாகப் புரிந்​து​கொள்​கிறேன்.

இவை தீவிர​மாகப் பரிசீலிக்​கப்​பட்டு, உரிய தீர்வு காணப்​பட வேண்​டியவை. இருப்​பினும், நீட் தேர்வை எதிர்ப்​பது இதற்கு சரியான தீர்​வாகாது. தேசிய மருத்​துவ ஆணை​யச் சட்​டம், மருத்​து​வக் கல்​வியை ஒழுங்​குபடுத்​தும் மத்​திய சட்​டங்​களின் விதி​களின்​படி நீட் தேர்வு நடத்​தப்​படு​கிறது.

எனவே, சட்​டப்​பேரவை தீர்​மானம் மட்​டுமே தமிழக மாணவர்​களுக்கு நீட் தேர்​வில் இருந்து விலக்கு அளித்​து​விட முடி​யாது. அதற்​கான நாடாளு​மன்ற சட்ட நட​வடிக்​கைகள் அவ​சி​யம்.

மருத்​து​வக் கல்வி என்​பது ஏதோ ஒரு கல்​வித் தகுதி​யைப் பெறு​வதற்​கான படிப்பு மட்​டுமல்ல; மனித உயிர்​கள், உடல்​நலம், நல்​வாழ்வு ஆகிய​வற்​றுடன் நேரடி​யாக தொடர்​புடைய பொறுப்​பு​களை ஏற்​கும் மருத்​து​வர்​களை உரு​வாக்​கு​வதே இதன் நோக்​கம்.

எனவே, எதிர்​கால மருத்​து​வர்​களைத் தேர்ந்​தெடுப்​ப​திலும், அவர்​களுக்கு கல்வி அளிப்​ப​திலும் உரிய தரநிலைகளைப் பேணுவது தேசிய முக்​கியத்​து​வம் வாய்ந்​த​தாகும்.

நீட் தேர்​வில் தகுதி பெறு​வதன் மூலம், கலந்​தாய்வு நடைமுறைகள், தகுதித் தேவை​கள், இடஒதுக்​கீட்டு விதி​களுக்கு உட்​பட்டு நாடு முழு​வதும் உள்ள மருத்​து​வக் கல்வி நிறு​வனங்​களில் சேர மாணவர்​கள் போட்​டி​யிட முடியும்.

தவிர, அனைத்து மாணவர்​களும் நீட் தேர்​வில் சிறப்​பாகச் செயல்​படுவதற்​குத் தேவை​யான கல்​வித் தயாரிப்​பையும் ஆதரவையும் பெறுகிறார்​களா என்​ப​து​தான் நாம் எழுப்ப வேண்​டிய கேள்வி.

அரசுப் பள்​ளி​கள், கிராமப்​புறப் பகுதி​கள் அல்​லது தமிழ்​வழிக் கல்​விப் பின்​னணி​யைச் சேர்ந்த மாணவர்​கள் சிரமங்​களை எதிர்​கொண்​டால், அதற்​கான காரணங்​களை அரசு கண்​டறிந்து முறை​யாகத் தீர்வு காண வேண்​டும். ஒரு நுழைவுத் தேர்வை ரத்து செய்​வ​தால் மட்​டுமே கல்​வி​யின் தரம் மேம்​படாது; மாணவர்​களின் திறன் அதி​கரிக்​காது; சமூக நீதி உறுதிசெய்​யப்​படாது.

எனவே, அரசி​யல் கருத்து வேறு​பாடுகளைக் கடந்து, பொருளாதா​ரப் பின்​னணி, புவி​யியல் அமைவிடம், பயிற்று மொழி ஆகிய​வற்​றைப் பொருட்​படுத்​தாமல், தகுதி​யுள்ள ஒவ்​வொரு மாணவருக்​கும் மருத்​து​வ​ராகும் வாய்ப்பை நியாய​மான முறை​யில் உறுதிசெய்ய அனைவரும் ஒன்​றிணைந்து செயல்​படுவோம். இவ்​வாறு அதில் கூறியுள்​ளார்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியின்போது பொதுமக்கள் அளிக்கும் விவரங்களை பகிரக் கூடாது: கணக்கெடுப்பாளர்களுக்கு அறிவுரை