ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் ஸ்பெயினின் அல்காரஸ், ரஷியாவின் மெத்வதேவ் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
உலகின் டாப்-8 முன்னணி வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள டூரின் நகரில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று அதிகாலை நடந்த மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே 7-6 (7-4), 6-3 என்ற செட்கணக்கில் இத்தாலியின் பிளேவியோ கோபாலியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

