கோவை: அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் கோவை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழக முதல்​வர் பல்​வேறு நலத்​திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​கிறார். நிகழ்ச்​சிகளில் பங்​கேற்க 2 முறை தமிழகத்​துக்கு வந்த பிரதமர், தமிழக முதல்​வரை சிறந்த முதல்​வர் என்​றும், நேர்​மையான ஆட்​சியை நடத்தி வருபவர் என்​றும் பாராட்​டியுள்​ளார். தமிழக அரசின் மீது யாரும் சாட்​டையைச் சுழற்ற முடி​யாது.

இந்த இயக்​கம் மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டது. இரண்டு ஆளும் கட்​சிகளை​யும் எதிர்க்​கட்சி வரிசையில் அமர வைத்த இயக்​கம் இது. கள்​ளக்​குறிச்சி ஆட்​சி​யருக்கு எம்​எல்ஏ குறுஞ்​செய்தி அனுப்​பிய விவகாரத்​தில் விசா​ரணை முடிந்த பிறகே அதுகுறித்து பதிலளிக்க முடியும்.

தமிழகத்​தில் சட்​டம் ஒழுங்கு சரி​யில்லை என்று எதிர்க்​கட்​சித் தலை​வரும், திமுக​வினரும் கூறுகின்​றனர். திமுக ஆட்​சியை மக்​கள் ஏன் மாற்​றினார்​கள் என்​ப​தற்கு அவர்​கள் பதிலளிக்க வேண்​டும்.

சிறந்த ஆட்​சியை வழங்​கி​யிருந்​தால் ஏன் எதிர்க்​கட்சி வரிசையில் அமர்ந்​தார்​கள்? சிறந்த ஆட்​சியை வழங்​கிய​தாக கூறும் அதிமுக, ஏன் மூன்​றாவது இடத்​துக்கு தள்​ளப்​பட்​டது என்​ப​தற்​கும் பதிலளிக்க வேண்​டும். தவெக சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் அனைவருக்​கும் முதல்​வர் உரிய அறி​வுரைகளை வழங்​கி​யுள்​ளார். இவ்​வாறு அவர் கூறினார்.

சூரசம்ஹார விழாவின்போது முதல்வர் விஜய்க்கு அரோகரா முழக்கம்: தலைவர்கள் கண்டனம்