சென்னை,

முதுமலை வனப்பகுதிக்குள் முறையான் அனுமதி பெற்றே சென்றேன் என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

சென்னையில் அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது:-

விலங்குகளையும் நேசிப்பவன்

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஏறக்குறைய அனைத்து காடுகளுக்கும் சென்று வந்துள்ளேன். நான் மக்களை மட்டுமல்ல, விலங்குகள், காடுகள் மற்றும் கடலையும் நேசிப்பவன். எந்தவொரு விலங்குக்கும் என்னால் தீங்கு ஏற்படும் என்று கூற முடியாது என்று அவர் தெரிவித்தார்.

விமர்சனம்

முறையான அனுமதி பெற்றே முதுமலை வனப்பகுதிக்குள் சென்றேன். இதில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை. அரசியல் ரீதியாக என் மீது விமர்சனம் செய்ய முடியாதவர்கள் இதுபோன்ற விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பிருந்தே காடுகளுக்கு சென்று வருகிறேன். தர்மபுரியில் உள்ள வத்தல் மலைக்கு யாராலும் எளிதில் செல்ல முடியாது. அந்த மலைக்கும் நான் சென்று வந்துள்ளேன். நான் மக்களை மட்டுமல்ல, விலங்குகளையும் நேசித்து வருகிறேன். எந்த தீபாவளிக்கும் வீட்டில் இருப்பதில்லை. காட்டிற்குத்தான் சென்று வருவேன்.

தமிழ்நாடு டிரக்கிங்

கடந்த காலங்களில் என்னுடைய முயற்சியால்தான் தமிழ்நாடு டிரக்கிங் உருவானது. நான் செல்லும் இடங்களில் உள்ள பழங்குடியின மக்கள், தங்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அந்தக் கோரிக்கையை முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துச் சென்றேன்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.