செங்குன்றம்: திருவள்ளூர் மாவட்டத்தில் செங்குன்றம் மற்றும் அதனை ஒட்டியுள்ள புழல் ஊராட்சி ஒன்றிய பகுதிகள், சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளாகும். இப்பகுதிகளில் புதிய குடியிருப்புகள் தொடந்து கட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், செங்குன்றம் அருகே புள்ளிலைன் ஊராட்சிக்கு உட்பட்ட புதுநகர், ஆருண் உல்லாச நகர் பகுதியில் செயல்பட்டு வரும் மணல் யார்டுகளில் பழவேற்காடு மற்றும் காட்டுப்பள்ளி கடற்கரை பகுதிகளிலிருந்து, சட்டவிரோதமாக கடற்கரை மணலை எடுத்து வந்து, தரம் குறைந்த ஆற்று மணலுடன் கலந்து விற்பனை செய்யப்படுவதாக சமூக ஆர்லர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
இந்த புகாரை தொடர்ந்து, நேற்று கனிமவளத் துறை அமைச்சர் டி.கே.பிரபு, புள்ளிலைன் ஊராட்சிக்கு உட்பட்ட புதுநகர், ஆருண் உல்லாச நகர் பகுதியில் செயல்பட்டு வரும் சில மணல் யார்டுகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், “காட்டுப்பள்ளி பகுதியிலிருந்து உரிய அனுமதியின்றி, கடற்கரை மணல் எடுத்து வரப்பட்டு, மலை போல் மிகப்பெரிய அளவில் இருப்பு வைக்கப்பட்டிருந்ததும், அந்த மணல் ஆற்று மணலுடன் கலந்து விற்பனை செய்யப்பட்டதும்” தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, அமைச்சரின் உத்தரவின் பேரில், அதிகாரிகள், கலப்பட மணல் விற்பனையில் ஈடுபட்டு வந்த 15 மணல் யார்டுகளுக்கு ‘சீல்’ வைத்தனர். மேலும், தொடர்புடையவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற் கொள்ளும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியின்போது பொதுமக்கள் அளிக்கும் விவரங்களை பகிரக் கூடாது: கணக்கெடுப்பாளர்களுக்கு அறிவுரை
