இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திலும், மாநில எல்லையான களியக்காவிளையிலும், கேரள மாநிலம்-சபரிமலையிலும் 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகவல் மையங்கள் 20.1.2027 வரை செயல்படும்.

சென்னை ஆணையர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தை 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், களியக்காவிளை தகவல் மையத்தை 98944 33179, 87606 68834, 94862 70443 ஆகிய எண்களிலும், சபரிமலையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தை அலுவலர்களின் கைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

சபரிமலை தகவல் மையத்தில், இன்று முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந்தேதி வரை பிரேம்குமார் (63858 06900), லால்கிருஷ்ணன் (70949 06442), டிசம்பர் 3-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை சிவக்குமார் (94439 94342), சதீஷ்குமார் (73588 39969), சேர்மராஜா (83440 21828), வருகிற 18.12.2026 முதல் 2.1.2027 வரை செந்தில் குமார் (70105 49951), சஜீவன் (99405 76898), சந்தீப் குமார் (8531070571).

3.1.2027 முதல் 20.1.2027 வரை வெங்கடேஷ் (98433 70229), ரமேஷ் (84384 44770), சுதாகர் (99425 05466) ஆகியோரை பக்தர்கள் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.