சென்னை: பிரபஞ்​சத்​துக்​கும், மனிதனுக்​கும் இடை​யி​லான ஆழமான தொடர்பை ‘அப்​ஸ்ட்​ராக்ட்’ ஓவியங்​கள் மூலம் உணர்த்​தும் வகை​யில் பிரபல ஓவியர் சுந்​தரேசன் ஜெகன்​னிவாசனின் (ஜெகன்) ‘காஸ்​மிக் அர்​பன் கனெக்ட்’ ஓவியக் கண்​காட்சி சென்னை லலித் கலா அகாட​மி​யில் நேற்று தொடங்​கியது. எஸ்கேசிஎல் நிறு​வனத்​தின் நிர்​வாக இயக்​குநர் மீரா ரெட்டி தொடங்கி வைத்​தார்.

தாள்​களில் வரையப்​பட்ட பேனா சித்​திரங்​கள், எண்​ணெய் வண்​ணம், அக்​ரி​லிக், கேன்வாஸில் உரு​வாக்​கப்​பட்ட 108 ஓவியங்​கள் காட்​சிக்கு வைக்​கப்​பட்​டுள்​ளன.

நுழைவுவாயி​லில் வைக்​கப்​பட்​டுள்ள 48 சிறிய ஓவியங்​களின் தொகுப்பு, பார்​வை​யாளர்​கள் தங்​கள் விருப்​பத்​துக்கு ஏற்ப மாற்றி அமைத்து பல கோடி வடிவங்​களை தாங்​களாகவே உரு​வாக்​கிக் கொள்​ளும் வகை​யில் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

கண்​காட்சி குறித்து ஓவியர் ஜெகன் கூறிய​தாவது: சென்னை மனிதர்​களை​யும், அவர்​களது நகைச்​சுவை உணர்​வையும் என் தந்தை எழுத்​தாளர் பாக்​கியம் ராமசாமி (ஜ.ரா.சுந்​தரேசன்) தனது எழுத்​துகளால் வண்​ணமய​மாக்​கினார்.

பிரபஞ்​சமும், நாமும் ஒன்​றுதான் என்​பதை எனது ஓவியங்​கள் மூலம் வெளிப்​படுத்​தி​யுள்​ளேன். நாம் ஒரு வாய் சாப்​பிட வேண்​டும் என்​றால், எங்​கேயோ மழை பெய்து, யாரோ ஒரு​வர் விவசாயம் செய்து, அது பல்​வேறு சங்​கி​லித்​தொடர் செயல்​பாடுகளை கடந்து நம் கைக்கு வந்து சேர வேண்​டும்.

ஒட்​டுமொத்த உல​கமும், பிரபஞ்​சமும் நமக்​காகவே இயங்​கு​கின்​றன என்ற தத்​து​வத்​தின் அடிப்​படை​யில் இக்​கண்காட்சி உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இங்கு உள்ள அனைத்​தும் வண்​ணங்​கள் மூலம் மனித உணர்​வு​களை வெளிப்​படுத்​தும் அப்​ஸ்ட்​ராக்ட் ஓவியங்​கள்.

ஏஐ தொழில்​நுட்​பம் வந்​தா​லும்​கூட, நமது பாரம்​பரிய ஓவியக் கலை 150 ஆண்​டுகள் வரை உறுதி​யாக நிலைத்​திருக்​கும். இவ்​வாறு அவர் கூறினார். கண்​காட்சி ஒருங்​கிணைப்​பாளராக பிரபல ஓவியக் கலைஞர் எம்.ஜி.தொட்​டமணி செயல்​படு​கிறார்.

இந்த நிகழ்​வில் மேடெக்ஸ் நிறு​வன நிர்​வாகி யோகேஸ்வரன், எத்​திராஜ் மகளிர் கல்​லூரி தலை​வர் வி.எம்.முரளிதரன், டிஎஸ்எம் உரிமையாளர் கே.மகாலிங்​கம், எஸ்கே சிஎல் சிவன் ரெட்டி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். கண்​காட்சி நவ.20-ம் தேதி வரை நடை​பெறுகிறது. காலை 11 முதல் மாலை 7 மணி வரை பார்​வை​யிடலாம்.

பதிவுக்கான ஆவணத்தை மக்களே உருவாக்கலாம்: எளிய வழிமுறை வெளியிட்டது பதிவுத் துறை