ஜம்மு - காஷ்மீரின் ரோந்து பணியின் போது காணாமல் போன சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் உள்ள டச்சான் மற்றும் மர்வா வனப்பகுதியில் சிறப்பு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த ரஷ்பால் குமார் மற்றும் பாபி சந்த் ஆகிய இரண்டு சிறப்பு காவல் அதிகாரிகள் ரோத்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்கள் இருவரும் கியார் முகாமிலிருந்து பஸ்னான் பகுதியில் உள்ள ராணுவ முகாமை நோக்கி இவர்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் அதன்பின்னர் மாயமாகியுள்ளனர். மாலை நேரத்தில் தெஹர்னா வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும், அதன் பிறகு அவர்களது செல்போன்கள் அணைக்கப்பட்டு தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடர்ந்த வனப்பகுதி மற்றும் தொலைத்தொடர்பு வசதி இல்லாத பகுதிகளில் காவலர்கள் மாயமான நிலையில், அவர்களை இருவரையும் தேடும் பணியில் இந்திய ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் இறங்கினர்.

இந்த நிலையில், காணாமல் போன சிறப்பு காவல் அதிகாரிகளின் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்பால் சிங் (45) மற்றும் பாபி சந்த் (57) என அடையாளம் காணப்பட்ட இருவரும் தங்களது ஆயுதங்களுடன் காணாமல் போன இடத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அவர்களது உடல்கள் டச்சான் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாகவும், இருவரின் உடலிலும் துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறப்பு காவல் அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் ஜம்மு - காஷ்மீர் காவல் துறையினர் மற்றும் இந்திய ராணுவத்தினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The bullet-riddled bodies of two Special Police Officers, identified as Rishipal and Bobby Chand, who went missing after gunfire was reported in Jammu and Kashmir's Kishtwar district on Wednesday, were recovered from the Dachan forest area.