சென்னை: அதானி காட்​டுப்​பள்ளி துறைமுகம் சார்​பில் பழவேற்​காடு பகுதி​யில் 90 சோலார் மின் விளக்​கு​கள் நிறு​வப்​பட்​டுள்​ளது.

இது​தொடர்​பாக அந்​நிறு​வனம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: பழவேற்​காடு, பசி​யாவரம் பாலம், எடமணிகுப்​பம், எடமணி காலனி, சாத்​தாங்​குப்​பம், சிவன்​குப்​பம், காட்​டுப்​பள்ளி, காட்​டுப்​பள்ளி குப்​பம், காளாஞ்சி ஆகிய கிராமங்​களி​லுள்ள சாலைகளில் போதிய விளக்​கு​கள் இல்​லாத நிலை​யில், சமூக விரோத செயல்​கள் ஏற்​படக்​கூடும் என்ற அச்​சத்​தில் அப்​பகுதி மக்​கள் இருந்​தனர்.

இரவு நேரங்​களில் பெண்​கள் வேலைக்கு சென்று வரும்​போது போதிய வெளிச்​சம் இல்​லாததால் சிரமத்​துக்கு ஆளாகி வந்​தனர்.

இந்​நிலை​யில் இப்​பகுதி மக்​களின் நீண்​டகால வேண்​டுகோளுக்கு இணங்க அதானி காட்​டுப்​பள்ளி துறைமுகத்​தின் சமூக மேம்​பாட்டு துறை சார்​பில் அப்​பகுதி​யில் 90 சோலார் மின் விளக்​கு​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

மீனவ கிராமங்​கள் பயன்​பெறும்

இந்த சூரியசக்தி மின் விளக்​கு​களை மக்​கள் பயன்​பாட்​டுக்கு அர்ப்​பணிக்​கும் விழா நேற்று நடை​பெற்​றது.

இதில் பொன்​னேரி வரு​வாய் கோட்​டாட்​சி​யர் மணி​யரசன், காவல் உதவி ஆணை​யர் தமிழ்​வாணன், அதானி காட்​டுப்​பள்ளி துறைமுகத்​தின் தலைமை அதி​காரி செரியன் ஆப்​ரஹாம் ஆகியோர் பங்​கேற்று மின் விளக்​கு​களை இயக்கி வைத்​தனர்.

இதன் மூலம் 5 ஊராட்​சிகளை சேர்ந்த மீனவ கிராமங்​கள் பயன்​பெறும். இத்​திட்​டம் மீனவர்​களுக்​கும், சுற்​றுலாப் பயணிகளுக்​கும் பயனுள்​ள​தாக இருக்​கும்.

அதானி கட்​டுப்​பள்ளி துறை முகத்​தின் சமூக மேம்​பாட்டு துறை மூலமாக கடந்த ஆண்​டில் பழவேற்​காடு கலங்​கரை விளக்​கம் பாலத்​தில் 32 சோலார் மின் விளக்​கு​கள், 20 மீனவ கிராமங்​களில் படகு நிறுத்​து​மிடத்​தில் 20 சோலார் உயர்​கோபுர மின் விளக்​கு​கள் என இது​வரை 142 சூரிய சக்தி மின் விளக்​கு​கள் பொருத்​தப்​பட்​டுள்​ளன.

சம்பா நெற்பயிர் காப்பீட்டு காலவரம்பு டிச.1 வரை நீட்டிப்பு: அமைச்சர் ஆர்.வினோத் தகவல்