ஆட்சிக்கு சவால்விடும் சட்டம் - ஒழுங்கு விமர்சனங்களைக் கூட மாற்று வழியில் மடைமாற்றி விடும் வித்தைகள் தெரிந்த வாகைக் கட்சிக்கு ‘குறுஞ்செய்தி’ விவகாரம் தீராத குடைச்சலாக மாறி இருக்கிறது. இந்த நிலையில், ‘குறுஞ்செய்தி’ குற்றச்சாட்டு தொடர்பாக அதை அனுப்பியதாகக் கூறப்படும் மக்கள் பிரதிநிதியை வாகைக் கட்சி தலைமையில் இருந்து ஆளாளுக்கு பிடித்து வறுத்தெடுத்து விட்டார்களாம்.
இதையடுத்தே, “நான் அப்படியொரு காரியத்தை செய்யவே இல்லை. முந்தைய ஆட்சியின் ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டுவர முயற்சித்ததால் எனக்கெதிராக சதி செய்துவிட்டார்கள்” என்று புலம்பித் தவிக்க ஆரம்பித்தாராம் மக்கள் பிரதிநிதி.
இதனிடையே, இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் சென்னையில் இருந்து தலைமை அதிகாரியே ‘குறுஞ்செய்தி’ புகார் அதிகாரியுடன் வீடியோ காலில் பேசினாராம். அப்போது, ‘குறுஞ்செய்தி’ தொடர்பாக மறுப்புத் தெரிவிக்குமாறு சொன்னாராம் தலைமை அதிகாரி.
ஆனால், அதை ஏற்க மறுத்த மாவட்ட அதிகாரி, “நியாயப்படி பார்த்தால் இந்த விவகாரம் நடந்ததா இல்லையா என்பதை நான் தான் பேசவேண்டும். ஆனால், முந்திரிக் கொட்டை கணக்காய் அவரு பேசிட்டு இருக்காரு” என்று கொதிப்புடன் பேசினாராம்.
தலைமை அதிகாரியைத் தொடந்து ஒருசில மாண்புமிகுக்களும் மாவட்ட அதிகாரியிடம் பேசி, இந்தப் பிரச்சினையை சுமூகமாக முடிக்கப் பாருங்க” என்று கெஞ்சாத குறையாகக் கேட்டுக் கொண்டார்களாம். ஆனால், தனது கணவரிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன் என்று அவர்களுக்கு பதில் சொல்லிவிட்டு லைனைத் துண்டித்துக் கொண்டவர், அதன் பிறகு வந்த சில அழைப்புகளை எடுக்காமலே தவிர்த்துவிட்டாராம்.
இந்த நிலையில், ‘குறுஞ்செய்தி’ விவகாரத்தில் தங்களுக்கு உரிய நியாயம் வேண்டும் என மாவட்ட அதிகாரியின் கணவர் தலைமை அதிகாரிக்கு புகார் கொடுத்திருப்பதாக செய்திகள் பரவின. இதுபற்றி சிலர் விசாரித்த போது, “எப்போதோ கொடுத்த புகார் அது. இப்போது கொடுத்தது போல் செய்தி பரப்பப்படுகிறது” என்று சொல்லி சமாளித்தாராம் மாவட்ட அதிகாரியின் அதிகாரி கணவர்.
ஊழல் வழக்குகளை காலக்கெடுவுக்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றங்களை அதிகரிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு