சென்னை,

தமிழகத்தில், 'ஹுவாஸின் ஆட்டோமோட்டிவ் இந்தியா'(Hwashin Automotive India), 'சியோன் இ -ஹுவா சம்மிட் ஆட்டோ மோட்டிவ் இந்தியா'(Seoyon E-hwa Summit Automotive India) ஆகிய நிறுவனங்கள், 1,370 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கான விருப்ப கடிதங்களை, தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவிடம், சென்னையில் நேற்று வழங்கின. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

தொழில் முதலீடுகள்

“தமிழகத்திற்கு வேண்டிய வர புதிய தொழில் முதலீடுகள், ஆந்திர மாநிலத்திற்கு செல்வதாக சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகிறது. இத்தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

2 நிறுவனங்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை, 'சிப்காட்' நிறுவனத்தின் தொழில் பூங்காவில் செயல்பட்டு வரும், ஹுவாஸின் ஆட்டோமோட்டிவ் இந்தியா நிறுவனம், தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில், 850 கோடி ரூபாய் முதலீடு செய்ய முன்வந்துள்ளது.

இந்த முதலீடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உள்நாட்டு உற்பத்தி, திறன் மேம்பாடு, புதிய திட்ட மேம்பாடு ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்பட்டு வரும், சியோன் இ-ஹுவா சம்மிட் ஆட்டோமோட்டிவ் இந்தியா நிறுவனம், தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில், 520 கோடி ரூபாய் முதலீடு செய்ய முன் வந்துள்ளது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.