சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,600 குறைந்து, ரூ.1,02,520-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.45 குறைந்து, ரூ.13,210-க்கும், பவுனுக்கு ரூ.360-க்கு குறைந்து, ரூ.1,05,680-க்கும், புதன்கிழமை கிராமுக்கு ரூ.195 குறைந்து ரூ.13,015-க்கும், பவுனுக்கு ரூ.1,560 குறைந்து ரூ.1,04,120-க்கும் விற்பனையானது.
3-வது நாளாக குறைந்த தங்கம் விலை
இந்த நிலையில், தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.12,815-க்கும், பவுனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,02,520-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.200-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

