வாஷிங்டன்,

அமெரிக்காவின் வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையத்தில் நேற்று மாலை புறப்படுவதற் காக ஓடுபாதை அருகே வரிசையில் நின்ற விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.

டல்லாஸ்-போர்ட் வொர்த் நோக்கி செல்லவிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் இறக்கை, சிகாகோ ஓஹேர் நோக்கிச் செல்லவிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் இறக்கை நுனியில் உரசியது.

உயிர் தப்பிய பயணிகள்

இதில் ஒரு விமானத்தின் இறக்கை நுனி உடைந்து விழுந்ததால் பயணிகள் மத்தியில் கடும் பதற்றம் ஏற்பட்டது. இந்த 2 விமானத்தில் மொத்தம் 344 பேர் அமர்ந்திருந்தனர். இருப்பினும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதையடுத்து உடனடியாக இரு விமானங்களும் நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் மாற்று விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது