ஜார்க்கண்டில் சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (நவ. 29) நிவாரணம் அறிவித்துள்ளார்.
பிகாரின் நாலந்தா மாவட்டத்திலிருந்து 14 பேருடன் ஒரு ஸ்கார்பியோ வாகனம் வந்து கொண்டிருந்தது. அப்போது, பைங்கி என்ற இடத்தில், ராஞ்சி - பாட்னா பிரதான சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஸ்கார்பியோ, முன்னால் சென்ற அடையாளம் தெரியாத ஒரு வாகனத்தின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் வாகனத்திலிருந்த 14 பேரில் 13 பேர் பலியாகினர்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதவது:
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள்.
பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 -ம் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
ஜார்க்கண்டில் சாலை விபத்து: 4 குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!
