சென்னை: ‘‘தவெக அரசு பொறுப்பேற்ற கடந்த 6 மாத காலத்தில் தமிழகத்தின் மூலதனச் செலவினம் 11 சதவீதம் சரிந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது’’ என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: தவெக அரசு பொறுப்பேற்ற கடந்த 6 மாத காலத்தில் தமிழகத்தின் மூலதனச் செலவினம் 11 சதவீதம் சரிந்துள்ளதாக ‘தி இந்து- பிசினஸ் லைன்’ இதழில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் கர்நாடகா (+51 சதவீதம்), உத்தரப்பிரதேசம் (+23 சதவீதம்), ராஜஸ்தான் (+21 சதவீதம்), மகாராஷ்டிரா (+5 சதவீதம்) போன்ற மாநிலங்கள் மூலதனச் செலவுகளைப் பொறுத்து வளர்ச்சிப் பாதையில் செல்லும்போது, தமிழகம் மட்டும் (-11 சதவீதம்) பின்னடைவைச் சந்தித்துள்ளது கவலை அளிக்கிறது.

கடந்த 5 மாதங்களில் ஏற்பட்டுள்ள இந்த செலவுகள் கூட, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கானவை. இந்த அரசு எந்தப் புதிய பணிகளையும் மேற்கொள்ளாதது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

சாலைகள், குடிநீர் வசதிகள், அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற, மக்களின் அத்தியாவசியக் கட்டமைப்புகளை உருவாக்கவும், மேம்படுத்தவும் செய்யப்படும் முதலீடாக இருக்கும் மூலதனச் செலவினம் சரிவடையும் போது, அதன் விளைவுகளை அன்றாடம் எதிர்கொள்ளப் போவது சாமானிய மக்கள்தான்.

மூலதனச் செலவினம் குறையக் காரணம் என்ன? பட்ஜெட்டில் மூலதனப் பணிகளுக்கு ஒதுக்கிய நிதியில், இதுவரை இந்த அரசு எந்தெந்தத் துறைகளில், எவ்வளவு நிதி செலவிட்டிருக் கிறது? எந்தெந்தத் துறைகளில் செலவினம் தேக்கமடைந்துள் ளது? அத்தகைய தேக்க நிலைக்கான காரணம் என்ன?

ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களில் எத்தனை பணிகள்இன்னும் தொடங்கப்பட வில்லை? அதற்கான காரணங்கள் என்ன? இவற்றுக்குச் செலவிடப்பட வேண்டிய நிதி ஆதாரங்கள் வேறு என்ன திட்டங்களுக் காகச் செலவிடப்படுகின்றன என்பன போன்ற பல கேள்விகள் மக்கள் மனதில் எழுந்துள்ளன. இவற்றுக்கெல்லாம் உரிய விளக்கம் அளிக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு: அமைச்சர் வெங்கட ரமணன் ஆஜராக உத்தரவு