மத்திய அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதில் மிகவும் தீவிரமாக செயலாற்றி வருகிறது. இந்த மசோதாவை மிகவும் தீவிரமாக எதிர்த்து வந்த திமுக இந்த மசோதாவை ஆதரிப்பதாக நேற்று அறிவித்தது.

எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு?

நாளை நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில், இந்த மசோதா நிறைவேறினால் நாட்டில் எந்தெந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு எத்தனை தொகுதிகள் அதிகரிக்கும்? என்பதை கீழே விரிவாக காணலாம். ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 50 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1. அந்தமான் நிகோபர்  - 2

2. ஆந்திரா - 38

3. அருணாச்சலம் - 3

4. அசாம் - 21

5. பீகார் - 60

6. சண்டிகர் - 2

7. சத்தீஸ்கர் - 17

8. டையூ - டாமன் - 3

9. கோவா - 3

10.  குஜராத் - 39

11. ஹரியானா - 15

12. இமாச்சல பிரதேசம் - 6

13. ஜம்மு காஷ்மீர் - 8

14. ஜார்க்கண்ட் - 21

15. கர்நாடகா - 42

16. கேரளா - 30

17.  லடாக் - 2

18.  லட்சத்தீவு - 2

19. மத்திய பிரதேசம் - 44

20. மகாராஷ்ட்ரா - 72

21. மணிப்பூர் - 3

22. மேகலாயா - 3

23. மிசோரம் - 2

24. நாகலாந்து - 2

25. டெல்லி - 11

26. ஒடிசா - 32

27. பாண்டிச்சேரி - 2

28. பஞ்சாப் - 20

29. ராஜஸ்தான் - 38

30. சிக்கிம் - 2

31. தெலங்கானா - 26

32. தமிழ்நாடு - 59

33. திரிபுரா - 3

34. உத்தரபிரதேசம் - 120

35. உத்தரகாண்ட் - 8

36. மேற்கு வங்கம் - 63

இவ்வாறு தொகுதிகள் மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களுக்கும் அதிகரிக்கப்பட்டால் நாட்டில் 824 தொகுதிகள் முதல் 850 வரை தொகுதிகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்டால் இந்தியா முழுவதும் 281 தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மசோதா நிறைவேறுமா?

கடந்த முறை இந்த மசோதாவை மத்திய பாஜக அரசு நிறைவேற்ற முயற்சித்த நிலையில், போதிய ஆதரவு கிடைக்காததால் அவர்களால் அதை நிறைவேற்ற இயலவில்லை. மக்களவையில் மொத்தம் 543 எம்பி-க்களில் 3 இடங்கள் காலியாக உள்ள நிலையில், 540 எம்பி-க்களில் சபாநாயகர் இல்லாமல் 359 எம்பி-க்கள் ஆதரவு தேவை. 

கடந்த முறை எதிர்ப்பு தெரிவித்த திமுக, தேசியவாத காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் இந்த முறை ஆதரவைத் தெரிவித்துள்ளனர். அகாலி தளமும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளதால் இந்த மசோதாவை நிறைவேற்ற சிரமம் இருக்காது என்று கருதப்படுகிறது.


மக்களவைத் தொகுதிகள் மட்டுமின்றி சட்டமன்ற தொகுதிகள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் தற்போதுள்ள 234 தொகுதிகள் அதிகரித்து 351 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது. நாட்டிலே அதிக மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற தொகுதிகள் எண்ணிக்கை 605 ஆக உயரும். மகாராஷ்ட்ராவில் 441 ஆக உயரும்.