சென்னை: நகைக்​கடைகள் மற்​றும் அடகு கடைகளில் திருட்டு, கொள்ளை போன்ற சம்​பவங்​களைத் தடுக்​கும் வகை​யில், சிசி​டிவி கேமரா பதிவு​களைக் குறைந்​தது 6 மாதங்​கள் கட்​டாயம் பாதுகாக்க வேண்​டும் என கடை உரிமையாளர்​களுக்​குச் சென்னை காவல் துறை​யினர் அறி​வுறுத்​தினர்.

சென்னை காவல் துறை சார்​பில், திரு​வல்​லிக்​கேணி பகுதி​களில் செயல்​பட்டு வரும் தங்க நகைக் கடைகள் மற்​றும் அடகு கடைகளின் உரிமையாளர்​களு​டனான ஆலோ​சனைக் கூட்​டம், கலை​வாணர் அரங்​கில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இக்கூட்டத்​துக்​குத் திரு​வல்​லிக்​கேணி காவல் துணை ஆணை​யர் வி.ஜெயச்​சந்​திரன் தலைமை தாங்​கினார். இதில் காவல் உதவி ஆணை​யர்​கள், காவல் ஆய்​வாளர்​கள், உதவி ஆய்​வாளர்​கள், காவலர்​கள் மற்​றும் நகைக் கடை, அடகு கடை உரிமையாளர்​கள் கலந்து கொண்​டனர். கூட்​டத்​தில், கடைகளில் திருட்டு உள்​ளிட்ட குற்​றச் சம்​பவங்​களைத் தடுப்​ப​தற்​காக மேற்​கொள்ள வேண்​டிய பாது​காப்பு நட​வடிக்​கைகள் குறித்து போலீ​ஸார் பல்​வேறு அறிவுரைகளை வழங்​கினர்.

அதன்​படி, கடைகளின் நுழைவு மற்​றும் வெளியேறும் பகுதி​கள், பணப் பரிவர்த்​தனை நடை​பெறும் இடங்​கள், நகைகள் வைக்கப்படும் பகுதி​கள் மற்​றும் பாது​காப்​புப் பெட்​டகங்​கள் உள்ள இடங்களில் தர​மான சிசி​டிவி கேம​ராக்​களைப் பொருத்த வேண்டும். கடைக்கு வரும் நபர்​களின் முகங்​களைத் தெளிவாக அடை​யாளம் காணும் வகை​யில் கேம​ராக்​களை அமைப்​ப​துடன், அவற்​றின் பதிவு​களைக் குறைந்​தது 6 மாதங்​கள் வரை பாதுகாப்பாகச் சேமித்து வைக்க வேண்​டும். சிசி​டிவி கேம​ராக்​கள் 24 மணி நேரமும் தடை​யின்​றிச் செயல்​படுவதை உறுதி செய்ய வேண்​டும்.

மேலும், புதிதாகப் பணி​யில் சேரும் ஊழியர்​களின் ஆதார் அட்டை, புகைப்​படம் உள்​ளிட்ட அடை​யாள ஆவணங்​களைப் பெற்று, அவர்​களின் விவரங்​களைச் சரிபார்க்க வேண்​டும். இரவு நேரங்​களில் கடைகளில் அதிக அளவி​லான பணத்தை வைத்திருக்​கக் கூடாது. தங்க நகைகளை ஓரிடத்​தி​லிருந்து மற்றொரு இடத்​துக்கு எடுத்​துச் செல்​லும் போது உரிய பாது​காப்பு ஏற்​பாடுகளை மேற்​கொள்ள வேண்​டும். அடிக்​கடி கடைக்கு வந்து நகைகளை வாங்​காமல் கடையை நோட்​ட​மிடு​பவர்​கள் மற்​றும் சந்​தேகத்​துக்​கிட​மான நபர்​களைக் கண்​காணிக்க வேண்​டும்.

அடகு கடைகளைப் பொறுத்த வரை, நகைகளை அடகு வைக்க வருபவர்​களின் ஆதார் அட்டை, ஓட்​டுநர் உரிமம், செல்​போன் எண் உள்​ளிட்ட விவரங்​களை முறை​யாகச் சரிபார்க்க வேண்​டும். வாடிக்​கை​யாளர்​களின் அடை​யாள ஆவணங்​களைப் பெற்று, அவர்​களின் முழு விவரங்​களை​யும் பதிவு செய்​வதுடன், அடகு வைக்​கப்​படும் நகைகள் மற்​றும் பணப் பரிவர்த்​தனைகள் தொடர்பான பதிவு​களை​யும் முறை​யாகப் பராமரிக்க வேண்​டும்.

குறிப்​பாக, சந்​தேகத்​துக்​கிட​மான சூழ்​நிலை​யில் நகைகளை அடகு வைக்க வருபவர்​கள் மற்​றும் ஒரே மாதி​ரியான நகைகளைத் தொடர்ந்து அடகு வைக்க வருபவர்​களிடம் கூடுதல் கவனம் செலுத்த வேண்​டும். திருட்டு நகைகள் எனச் சந்​தேகம் ஏற்பட்​டால், அவற்றை உரிய சரிபார்ப்​பின்றி ஏற்​றுக்​கொள்​ளாமல் உடனடி​யாகச் சம்​பந்​தப்​பட்ட காவல் நிலை​யத்​துக்​குத் தகவல் தெரி​விக்க வேண்​டும். இவ்​வாறு போலீஸ் அதி​காரி​கள் அறிவுறுத்தினர்.

குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு: அமைச்சர் வெங்கட ரமணன் ஆஜராக உத்தரவு