ஜார்க்கண்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 13 பேர் பலியாகினர்.

ஜார்க்கண்ட் மாநிலம், ராம் நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் இந்தக் கோர விபத்து நடந்தேறியுள்ளது.

ஜார்க்கண்டில் உள்ள பிரசித்தி பெற்ற ரஜ்ரப்பா கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பிகாரின் நாலந்தா மாவட்டத்திலிருந்து 14 பேருடன் ஒரு ஸ்கார்பியோ வாகனம் வந்து கொண்டிருந்தது.

அப்போது, பைங்கி என்ற இடத்தில், ராஞ்சி - பாட்னா பிரதான சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஸ்கார்பியோ, முன்னால் சென்ற அடையாளம் தெரியாத ஒரு வாகனத்தின் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த 13 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த ஒரு ஆண் தற்போது சதர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கார் முழுவதுமாக நொறுங்கிய இந்த விபத்தில் 4 குழந்தைகள், 4 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் உள்பட 13 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Thirteen people, including women and children, were killed in a road accident in Jharkhand.