Indoor Plants : மாசு நிறைந்த நகரங்களில் இன்டோர் செடிகளை வளர்க்க கஷ்டப்படுகிறீர்களா? தூசி, வெப்பம், மாசைத் தாங்கி வளரக்கூடிய 5 சிறந்த செடிகள் இதோ. இவை காற்றை சுத்தப்படுத்துவதோடு, குறைந்த பராமரிப்பிலேயே செழிப்பாக வளரும்.

தூசியான மூலைகள், குறைந்த வெளிச்சம், குறைவான தண்ணீர் என எந்த சூழ்நிலையிலும் ஸ்நேக் பிளான்ட் (Snake Plant) வளரும். இதன் நேரான இலைகள் வீட்டிற்கு மாடர்ன் லுக்கை தருவதோடு, காற்றையும் சுத்தப்படுத்தும்.

வெப்பம், வறண்ட காற்று, குறைவான பராமரிப்பு என அனைத்தையும் ஸிஸி பிளான்ட் (ZZ Plant) எளிதாகத் தாங்கும். இதன் பளபளப்பான பச்சை இலைகள், கடினமான சூழலிலும் அழகாகவே இருக்கும்.

அரைகா பாம் (Areca Palm) நகர சூழ்நிலைக்கு ஏற்ப நன்றாக வளரும். இதன் இறகு போன்ற இலைகள் அறையை அழகாக்கி, புத்துணர்ச்சியான சூழலை உருவாக்கும்.

தட்பவெப்ப நிலை மாறினாலும், சுற்றிலும் தூசி இருந்தாலும் ஸ்பைடர் பிளான்ட் (Spider Plant) நன்றாக வளரும். இதன் வளைந்த இலைகள் வீட்டை அழகாக்குவதோடு, வளர்க்கவும் எளிதானது.

குறைந்த கவனிப்பு இருந்தாலும், பலவிதமான உட்புற சூழல்களில் போத்தோஸ் (Pothos) செழித்து வளரும். மாசு மற்றும் குறைந்த பராமரிப்பைத் தாங்கிக்கொண்டு, இதன் கொடிகள் வீட்டை பச்சையாக மாற்றும்.