மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஜனவரி 16, 2027 முதல் பிப்ரவரி 14, 2027 வரை வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஸ்டாடோம் பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படும்.

மதுரை சந்திப்பு மற்றும் குருவாயூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அறிமுகப்படுத்தப்பட்ட விஸ்டாடோம் பெட்டி சேவையைக் கூடுதல் நாட்களுக்கு நீட்டித்து வெளியிட்டுள்ள தகவல் பயணிகள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி, ரெயில் எண் 16327 மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஜனவரி 16, 2027 முதல் பிப்ரவரி 14, 2027 வரை வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஸ்டாடோம் பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படும்.

மறுமார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில் எண் 16328 குருவாயூர் - மதுரை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஜனவரி 17, 2027 முதல் பிப்ரவரி 15, 2027 வரை வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் இந்த விஸ்டாடோம் பெட்டி இணைக்கப்படும்.

ரெயிலின் புதிய பெட்டி

இந்தக் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட ரெயிலில் பயணிகளின் வசதிக்கேற்பப் பல்வேறு வகுப்பு பெட்டிகள் இடம்பெறும். அதன்படி ரெயிலில் ஒரு ஏசி விஸ்டாடோம் பெட்டி, ஒரு ஏசி 3 அடுக்கு பெட்டி, இரண்டு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 7 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி என மொத்தம் 12 பெட்டிகள் இடம்பெறும்.

பாதுகாப்பான பயணம்

தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களை இணைக்கும் இந்த வழித்தடத்தில், ஆன்மீகப் பயணிகள் மட்டுமின்றிச் சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் பயணித்து வருகின்றனர். பரந்த கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் சுழலும் இருக்கைகள் கொண்ட விஸ்டாடோம் பெட்டியின் சேவை நீட்டிக்கப்படுவதால், வழித்தடத்தின் இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசித்தபடி பயணிகள் மகிழ்ச்சியான பயண அனுபவத்தைப் பெற முடியும்.